வசந்தனின் பக்கம்

ஜூன் 27, 2006

முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக…

Filed under: பொது, விமர்சனம் — maathahal @ 1:06 மு.பகல்

முசுப்பாத்தி…
இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு:
நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது.
‘இது நல்ல முசுப்பாத்தி’ என்றால் ‘நல்ல நகைச்சுவை’ என்று கருத்து. ‘முசுப்பாத்தியான ஆள்’ என்றால் ‘நகைச்சுவையான மனிதன்’.
‘முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்’ என்றால் ‘நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்’.

இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.

முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.

முசிதல் = 1.அறுதல்.
2.கசங்குதல்.
3.களைத்தல்.
4.ஊக்கங் குன்றுதல்.
5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.

முசித்தல் = 1.களைத்தல்.
2.வருந்துதல்.
3.மெலிதல்.
4.அழிதல்.
5.கசங்குதல்.

முசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow’s Tamil English Dictionary)
முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow’s Tamil English Dictionary)

முசிப்பாற்றி – முசிப்பாத்தி – முசுப்பாத்தி.
சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.

****************************

பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு

2 மறுமொழிகள் »

  1. தகவலுக்கு நன்றி. இச்சொல் குறித்த விக்சனரி உரையாடலுக்கு இது உதவியது. பார்க்க – http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:fun

    Comment by ரவி — பெப்ரவரி 1, 2007 @ 10:44 மு.பகல்

  2. வருகைக்கு நன்றி ரவி.
    இவ்வலைப்பக்கத்தை நான் கவனிக்காமல் விட்டு பல மாதங்களாயிற்று. என் மின்னஞ்சலுக்கு வந்த உங்கள் பின்னூட்டம்தான் இப்பக்கத்தையே எனக்கு ஞாபகப்படுத்தியது.
    நான் blogspot இல் தான் தொடர்ந்து எழுதிக்கொண்டுள்ளேன். அங்கு எழுதிய சில பதிவுகளை இங்கும் இட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் அந்த வேலையையும் கைவிட்டுவிட்டேன்.
    இச்சொல் பற்றி நீங்கள் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    Comment by வசந்தன் — பெப்ரவரி 3, 2007 @ 1:13 மு.பகல்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Theme: Shocking Blue Green. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.